முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதே முதல் கடமை -தங்கதமிழ்செல்வன்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி,ஜீன் - 20 - தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதே முதல் கடமை என வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ தங்கமிழ்செல்வன் பேசினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் வரதராஜபுரம்,கொத்தப்பட்டி,கதிர்நரசிங்கபுரம்,வண்டியூ இராமகிருஷ்ணாபுரம்,பாலக்கோம்பை,இராயவேலூர்,இராஜதானி,சித்தார்பட்டி,அழகாபுரி,தெப்பம்பட்டி,சேவாநிலையம்,அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்கள்சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கதிர்நரசிங்காபுரத்தில் எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சீனிவாசன்,கிளைச்செயலாளர் பழனிச்சாமி,ஊராட்சி கழக செயலாளர் கனி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருத்தப்பாண்டி,முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கவேல்,ஜெ.பேரவை ரஞ்சன்,இளைஞர் பாசறை செயலாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் தலைமையில் தங்கதமிழ்செல்வனுக்கு சிற்பபான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்கள் கூறும் குறைகளை பொறுமையுடன் கவனமாக கேட்கும் அவர் அதை பரிசீலித்து நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.மேலும் அவர் பேசுகையில் அம்மாவின் தலைமையில் தமிழகத்தில் இனி பொற்கால ஆட்சி எப்போதும் தொடரும் என்றும்,மக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் என்னிடம் கூறலாம் என்றும் அவர் பேசினார்.பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் ,சாலை ,மின்சாரம்,ரேசன் பொருட்கள் ,மருத்துவவசதிகள்,கழிப்பிட வசதிகளை செய்வதே எனது முதல் கடமை என கூறினார்.இந்நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் ஈஸ்வரிமுருகன் ஒன்றிய செயலாளர் பால்பாண்டி,ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் வரதராஜன்,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் செந்தில் பரமசிவம்,ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் முருகன்,மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன்,மற்றும் கழக உடன் பிறப்புகள் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்