முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் வாலிபால் லீக் கடைசி சுற்று போட்டி ஐதராபாத்தில் இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூன். - 20  - இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பிலான இந்தியன் வாலிபால் லீக் கடைசி சுற்றுப் போட்டி ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத்தில் இன்று துவங்க இருக்கிறது. இது பற்றிய விபரம் வருமாறு - இந்திய கைப்பந்து சம்மேளம் சார்பில் இந்தியன் வாலிபால் லீக் (ஐ. வி.எல்.) போட்டி 4 சுற்றுக்களாக நடத்தப்படுகிறது. இதில் சென்னை ஸ்பைக்கர்ஸ், ஐதராபாத் சார்ஜர்ஸ், மராத்தா வாரியர்ஸ்,கேரளா கில்   லர்ஸ், கர்நாடகா புல்ஸ், ஏனம் டைகர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற் றன. 

இதன் முதல் சுற்றுப் போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய நக ரமான பெங்களூரில் வெகு விமர்சையாக நடந்தது. இதில் மராத்தா வாரியர்ஸ் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. 

பின்பு சென்னையில் 2 -வது சுற்று லீக் ஆட்டம் நடந்தது. அடுத்து ஏனாமில் 3 -வது சுற்று ஆட்டம் நடந்தது. இந்த 2 சுற்றுக்களிலும் சென் னை ஸ்பைக்கர்ஸ் வெற்றி பெற்றது. 

ஐ.வி.எல். போட்டியின் 4 -வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஐதரா பாத்தில் இன்று துவங்குகிறது. இந்தப் போட்டி வரும் 24 -ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 

இதுவரை நடந்த 3 சுற்றுகள் முடிவில், சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி 26 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ஐதராபாத் சார்ஜர்ஸ் 24 புள்ளிகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளது. 

தவிர, ஏனம் டைகர்ஸ் மற்றும் கர்நாடகா புல்ஸ் அணி தலா 24 புள்ளி களுடனும், கேரளா கில்லர்ஸ் 20 புள்ளிகளுடனும் உள்ளது நினைவு கூறத்தக்கது. 

இன்று நடக்க இருக்கும் துவக்க ஆட்டத்தில், கேரளா கில்லர்ஸ், கர்நா டகா புல்சுடனும் (மாலை 3.30 மணி), ஐதராபாத் சார்ஜர்ஸ், மராத் தா வாரியர்சுடனும் (மாலை 5.30 மணி), சென்னை ஸ்பைக்கர்ஸ், ஏனம் டைகர்சுடனும் (இரவு 7.30 மணி) மோத உள்ளன.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்