முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளிடக் கரையில் நவீன வசதிகளுடன் தங்கும் விடுதி கட்டப்படும்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியின் மேம்பாட்டுக்காக ரூ. 190 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது புதுப்புது திட்டங்கள் பற்றி அவர் அறிவித்தார். குறிப்பாக, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் ஆகிய திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது, பக்தர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கொள்ளிடக் கரையில் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்து பக்தர்களின் மனதை குளிர வைத்துள்ளார். இது பற்றி விழாவில் அவர் கூறியதாவது,
ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் இந்த அரசு விழாவில், என் அன்பிற்கினிய தொகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதில் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியத் திருத்தலமாக விளங்குகிறது. வெள்ளிதிருமுத்தம் கிராமத்தில், திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 330 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஸ்ரீரங்கம் திருக்கோயில் வைணவர்களுக்கு உகந்த திருத்தலமாக மட்டும் அல்லாது, தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டின் கருவூலமாகவும் விளங்குகிறது.  ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு, தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை புரிகின்றனர். அருள்மிகு ரங்கநாதரை தரிசனம் செய்யும் போது, இங்குள்ள சிற்பக் கலைகளைப் பற்றி ஆராய்ச்சியும் செய்கின்றனர்.  எனவே, இறைவன் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயில், ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.  இத்திருக்கோயிலுக்கு, சாதாரணமாக, நாளொன்றுக்கு சுமார் 10,000 பேர் வருகை புரிகிறார்கள். சுமார் 2,000 பேர் சுவாமி தரிசனத்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் இங்கே தங்குகிறார்கள்.  இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான வசதிகள் ஸ்ரீரங்கம் நகரத்தில் இல்லை.  எனவே, பக்தர்கள் வசதிக்காக, பக்தர்கள் தங்கும் விடுதி ஒன்றை அமைத்துத் தர வேண்டியது அவசியமானது ஆகும்.  எனவே, அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக, கொள்ளிடக் கரையில், பஞ்சக்கரை சாலையில் உள்ள 8 ஏக்கர் 60 சென்ட் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய எழில்மிகு பக்தர்கள் தங்கும் விடுதி ஒன்று கட்டப்படும். சுமார் 1000 பக்தர்கள் தங்கும் வகையில், துயில் கூடம்,  குடும்பத்துடன் தங்கும் தனி அறைகள்; உணவு விடுதி; பாதுகாப்புப் பெட்டகம்; குளியலறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து வசதிகளும் அடங்கிய வளாகமாக இது அமைக்கப்படும்.  இந்த வளாகம், 36 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு புதிதாக கட்டப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மட்டுமல்லாது, திருவானைக்காவல், சமயபுரம் ஆகிய திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
* பக்தர்களுக்கான மின்கல சீருந்து
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பில், நீnullண்ட பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நீnullண்ட பிரகாரத்தை சுற்றி உள்ள சுவாமி சன்னதிகளுக்கு, தரிசனத்திற்காக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.  வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, மின்கலன் மூலம் இயக்கப்படும் சீருந்துகள் இருந்தால் நலமாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனவே, திருக்கோயில் நிர்வாகம் மூலம் 11 நபர்கள் அமரக் கூடிய மின்கலன் மூலம் இயக்கப்படும் சீருந்து ஒன்று பக்தர்களின் வசதிக்காக வாங்கப்பட்டுள்ளது. மேலும், 6 நபர்கள் அமரக் கூடிய, மின்கலன் மூலம் இயக்கப்படும் சீருந்து ஒன்றை நான் எனது சொந்த செலவில் ரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளேன். இந்த இரண்டு சீருந்துகளும், வயதான மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் அறிவித்தார். இத்திட்டத்தை கேள்விப்பட்டு பக்தர்கள் மனம் குளிர்ந்து போயிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago