முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாயூர் கோயிலில் எடியூரப்பா வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

குருவாயூர்,ஜூன்.- 21 - கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோவிலான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் வழிபாடு செய்தார்.
தனது வழிபாட்டை முடித்த பின் எடியூரப்பா தனது எடைக்கு எடை வெண்ணெய் கொடுத்து துலாபாரம் வழங்கினார். இந்த கோயிலில் துலாபாரம் கொடுக்கப்படுவதுதான் மிக முக்கியமான நிகழ்வாகும். பக்தர்கள் தராசின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்க, அவர்களது எடைக்கு தகுந்தாற்போல் வெண்ணெயோ, வெல்லமோ, வாழைப்பழமோ தராசின் அடுத்த பக்கத்தில் வைத்து கோயிலுக்கு காணிக்கை கொடுப்பார்கள். இதைத்தான் துலாபாரம் என்று சொல்கிறோம்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று குருவாயூர் கோயிலில் தனது எடைக்கு எடை வெண்ணெய் கொடுத்தார். கடந்த 3 வருடங்களாக கர்நாடக மாநிலத்தில் இவரது தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் 3 வருடங்களாகவே இவருக்கு ஒரே பிரச்சினைதான். பல வகையிலும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் எடியூரப்பா. இதுவரை 2 முறை நம்பிக்கை கோரும் தீர்மானத்தையும் சந்தித்து விட்டார். ஆனால் அதிர்ஷ்டம் இவர் பக்கத்தில் இருப்பதால் 2 முறையும் தப்பி விட்டார்.
ஆனாலும் கூட இவர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லை. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார் குமாரசாமி. காங்கிரசும் சேற்றை அள்ளி வீசுகிறது. இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் நேற்று குருவாயூர் சென்ற எடியூரப்பா அங்கு பயபக்தியுடன் குருவாயூரப்பனை வணங்கினார். தனது வழிபாடுகளை முடித்து விட்டு அவர் உடனே பெங்களூர் திரும்பினார்.
முன்னதாக அவர் கோயிலுக்கு சென்ற போது கோயில் நிர்வாக உயரதிகாரிகள் அவரை அன்புடன் வரவேற்றனர்.
கேரள மாநிலத்தில் மிகவும் புகழ் பெற்றது கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை. இது மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது.  இங்கு ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்து வருகிறார் எடியூரப்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்