முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் அருகே ரயில்களை கவிழ்க்க சதியா? ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், ஜூன்.- 21 - சாத்தூரில் தண்டவாளத்தில் சமூக விரோதிகள் சிலர்  தண்டவாள இணைப்பு ராடுகளை வைத்ததால் பெரும் சப்தத்துடன் நாகர் கோவில் - இராமேஸ்வரம் விபத்தின்றி தப்பியது. நாசவேலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இது பற்றிய விபரம்வருமாறு விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சிற்றாறு பாலத்தின் வழியாக நேற்று விடியற்காலை நாகர்கோவில் - ராமேஸ்வரம் எக்ஸ் பிரஸ் கடக்கும்போது பெரும் சப்தம் எழும்பியது. இதனையடுத்து ரயில் டிரைவர் சாத்தூர் ரயில்நிலையத்தில் புகார் தெரிவித்து சென்றார். இதனையடுத்து வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கும் பெரும் சப்தம் எழும்பியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்க்கொண்டனர். அப்போது தண்டவாளத்தில் மேலே ரயில்வே தண்டவாளங்களை இணைக்கும் ராடுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் ரயில் தண்டவாளங்களை இணைக்கும் இணைப்புகளும் 6 இடங்களில் விட்டு போயிருப்பது தெரியவந்தது.
உடனே அவற்றை சரிசெய்தனர். சம்பவ இடத்தை தென்னகரயில்வே கூடுதல் மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், ரயில்வே எஸ்பி ரமேஷ், விருதுநகர் மாவட்ட எஸ்பி அஜ்மல் ஹோடா நேரில் பார்வையிட்டனர்.
மேலும் தண்டவாளத்தின் அருகே ரத்த துளிகள் கிடந்ததால் மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் அப்பகுதியில் உள்ள காடுகளிலும் சோதனை மேற்க்கொண்டனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இது எதுவும் சமூக விரோதிகளின் நாசவேலையா எனவும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவங்களால் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர..பரப்பை ஏற்படுத்தியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்