முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.250 கோடி செலவில் வர்த்தக மையம் விரிவாக்க பணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - ரூ.250 கோடி செலவில் சென்னை வர்த்தக மையம் விரிவாக்கப்பணிகள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்திய அரசின் ​ இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழக அரசின் ​ தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியால் சென்னை வர்த்தக மையம் 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் 51 சதவீதமும் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் 49 சதவீதமும் பங்களிப்பு செய்து இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தகம் மற்றும்

தொழில்துறை உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில், தொழில் கண்காட்சிகளை நடத்தி அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

சென்னை வர்த்தக மையம், சென்னை மாநகரின் பிரதான இடமான

நந்தம்பாக்கத்தில், 25.48 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இவ்வர்த்தக மையம், 10560 சதுரடியில் மூன்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கண்காட்சி அரங்கங்களையும், ரூபாய் 60 கோடியே 60 இலட்சம் செலவில், 2000 பேர் அமரக் கூடிய கூட்டரங்கையும் உள்ளடக்கியது. சென்னை வர்த்தக மையத்தில், 2001ஆம் ஆண்டில் ஒரு கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 2010ஆம் ஆண்டில் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக 84 கண்காட்சிகளையும், 107 கூட்டங்களையும் நடத்துமளவிற்கு தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இப்போதுள்ள வர்த்தக மையத்தின் பரப்பளவு, நாட்டிலுள்ள பிற வர்த்தக மையங்களின் பரப்பளவைவிட குறைவாக உள்ளதால், உலகளாவிய மிகப் பெரிய

வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிகளை சென்னையில் நடத்த போதிய இடவசதியில்லை.

சென்னை வர்த்தக மைய விரிவாக்கத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  2010​ மே 3 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது சென்னை வர்த்தக மைய விரிவாக்க திட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில், தொழில்துறை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்

வகையில், சென்னை வர்த்தக மையம் உலகத்தரத்தில் விரிவாக்கப்படவுள்ளது. மேற்படி விரிவாக்கப் பணிக்கு, டாமாசிக் இன்ஜினியரிங் கன்சார்டியம் நிறுவனம் ​ சென்னை, கட்டுமானப் பொறியியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில், பல அடுக்கு கண்காட்சி

அரங்குகள் மற்றும் இரண்டு அடுக்கு அடித்தளங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

மேற்படி விரிவாக்கத்தின் மூலம், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களில் தலா 6 குளிர்சாதனப் வசதிக் கொண்ட கண்காட்சி அரங்குகள் ஒவ்வொன்றும் 66000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளன. அடித்தளத்தில் 74000 சதுரடி பரப்பளவில், 2000 கார்களும், 2000 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு

கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரிவாக்கத்தில், உணவுக்கூடம், நூலகம், கூட்டரங்கம், பேரழிவு மேலாண்மை முறை மற்றும் இதர வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இவ்விரிவாக்கத் திட்டம் ஜூலை 2011​ல் தொடங்கப்பட்டு, மார்ச் 2013​ல் முடிவடையும். இவ்விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றப்பின்,

நாட்டிலேயே சிறந்த தொழிற்கண்காட்சி வளாகமாக சென்னை வர்த்தக மையம் அமையும்.

சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டத்தினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.2.2011) தொடங்கி வைத்து, அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவர்  தேவேந்திரநாத் சாராங்கி, மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால், தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago