முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக்: இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. தடை

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, ஜூன்.- 21 - இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.  இந்த போட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தாமல் சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் ஒப்பந்தத்தில் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்திய வீரர்கள் அதில் பங்கேற்க கூடாது என்று பி.சி.சி.ஐ. கூறியுள்ளது.
நாகபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங் மனோகர் இது குறித்து கூறும் போது, தனியார் நிறுவனங்கள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் நமது வீரர்கள் பங்கேற்பதை வாரிய விதிகள் அனுதிக்காது. எனவே சிங்கப்பூர் நிறுவனம் நடத்தும் ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் போட்டியில் நமது வீரர்கள் பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க அந்நாட்டு வாரியம் தடை விதிக்குமா என்று சஷாங் மனோகரிடம் கேட்ட போது, இதற்கு நான் அப்படி கருதவில்லை என்றார்.
முன்னதாக இந்தியாவில் சமீபத்தில் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர்களை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என அந்நாடு திரும்ப அழைத்தது. இதனால் பி.சி.சி.ஐ.க்கும், இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்