Idhayam Matrimony

கறுப்புபணத்தை அதிக அளவில் வைத்திருப்பவர்கள் காங்கிரசாரே-மேனகா காந்தி

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

பேரரெய்லி, ஜூன் - 22 - சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் காங்கிரசார்தான் என்று பா.ஜ.க. எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும் இந்திரா காந்தியின் மருமகளுமான மேனகாகாந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது, சி.பி.ஐ. அமைப்பை காங்கிரஸ் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. தேவைப்படும்போது அதை எடுத்து பயன்படுத்தி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. ஏவி விடப்படுகிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரே மற்று யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் மீது காங்கிரஸ் நடந்துகொள்ளும் விதம் அநாகரீகமானது. சுவிஸ் வங்கியில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ்காரர்கள். எனவேதான் கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் கொடுப்போர் மீது காங்கிரசார் அடக்குமுறையை ஏவிவிடுகின்றனர். லோக்பால் மசோதா குறித்து அடுத்த மாதம் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரு நல்ல முடிவை எடுக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்