முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு உ.பி.யில் மகிளா காங். போராட்டம்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஜூன் - 22 - உத்தர பிரதேசத்தில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு  கண்டனம் தெரிவித்து வருகிற ஜூலை மாதம்   போராட்டம் நடத்த உ.பி. மகளிர்  காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமீப காலமாக கற்பழிப்பு உள்ளிட்ட  பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
இதனைக் கண்டித்து வருகிற  ஜூலை மாதம் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று  காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து உத்தர பிரதேச மாநில காங்கிரஸ்  தலைவி ரீட்டா பகுகுணா கூறுகையில்  இம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றும்  இதற்கு கண்டனம் தெரிவித்து ஜூலை முதல் வாரத்தில் தலைநகர் லக்னோவில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
முதல் கட்டமாக இந்த வாரம் முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர்  கூறினார்.
இதுபோன்ற குற்றங்கள் நிறைந்த  மாயாவதி  தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உத்தர பிரதேச மாநில பெண்கள் கமிஷன் இந்த  குற்றங்களை கண்டு கொள்ளவில்லை என்றும் ஏனென்றால் அந்த கமிஷனின் தலைவர் பகுஜன்  சமாஜ் கட்சி தலைவர்களில்  ஒருவரின் முக்கியமான உறவினர் என்றும்  அவர்  குற்றம்சாட்டினார்.
பெண்களுக்கு எதிராக சமீபத்தில் அதிகரித்து வரும் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக இந்த கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பதையே சமீபத்திய சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் அவர்  கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்