முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மணிமண்டபங்கள் நினைவு இல்லங்களை செய்தித்துறை இயக்குநர் இராசாராம் ஆய்வு

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 22 - மதுரை மாவட்டத்திலுள்ள மணிமண்டபங்கள் நினைவு இல்லங்களை செய்தித்துறை இயக்குநர் இராசாராம் ஆய்வு செய்தார். இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு சிறப்புச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள முனைவர் மூ.இராசாராம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம், விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம், சாத்தமங்கலத்தில் உள்ள மொழிஞாயிறு தேவநேய பாவாணர் மணிமண்டபம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்து, மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் மதுரை மாவட்ட கலெக்டர் உ.சகாயம் கலந்து  ஆலோசனை செய்தார்.
இந்த ஆய்வின்போது, தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டு வாசகர்கள் வருகை மற்றும் நூலகத்தின் செயல்பாடு குறித்து, நூலகரிடம் கேட்டறிந்து, தியாகி விஸ்வநாதாஸ் நினைவு இல்லத்தில் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூச்சு பணிகள்   செய்திட பொதுப்பணித்துறையிடம் மதிப்பீடு பெற்று கருத்துரு அனுப்ப செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
அதன்பின்பு விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம் மற்றும் சாத்தமங்கலத்தில் உள்ள மொழிஞாயிறு மணிமண்டபத்தை பார்வையிட்டு வர்ணம் பூசுதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை மூலமாக கருத்துரு பெற்று அனுப்ப செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கும் அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலம், கணினி அறை, புகைப்படப்பிரிவு அறை, செய்தியாளர் அறை, செய்திநிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்து மேலும் சிறப்பாக செய்தி மற்றும் விளம்பர பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் இளங்கோ, உதவிமக்கள் தொடர்பு அலுவலர்கள் இ. சாலிதளபதி, சு.மகேஸ்வரன் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago