முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அரசு மருத்துவமனை குறைகளை தீர்க்க நடவடிக்கை; கலெக்டர் உறுதி

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 22 - மதுரை அரசு மருத்துவமனையின் குறைகளை தீர்க்க கலெக்டர் சகாயம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மதுரை அரசு மருத்துவமனையில் கலெக்டர் சகாயம் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனைக்கு என்னென்ன வசதிகள் தேவை, என்ன குறைபாடுகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மருத்துவமனை நிர்வாகம் கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், மருத்துவமனை வளாகத்திற்குள் இருக்கும் காவல் நிலையத்தில் போலீசார்  பற்றாக்குறை உள்ளது. இதனால் மருத்துவமனைக்குள் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. எனவே கூடுதலாக போலீசார் நியமிக்க வேண்டும். அண்ணா பஸ் நிலைய வரிவாக்க கட்டிடம் பணிகள் முடிவடைந்து மூன்று மாதமாகியும், இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனை செயல்படுத்துவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவமனையில் உள்ள போர்வெல்களில் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் கூடுதலாக மருத்துவமனைக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.போதுமான பணியாளர்களும்  நியமிக்கப்படுவார்கள் என கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்