முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இந்தியா முதல் இன்னிங்சில் 246 ரன் ரெய்னா,ஹர்பஜன் சிங் அபாரம்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

கிங்ஸ்டன், ஜூன். - 22 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கிங்ஸ்டன் நகரில் நடை பெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 246 ரன் எடுத்து உள்ளது.  இந்தப் போட்டியில் முன் வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். ரெ ய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். டிராவிட் அவர்களுக்கு பக்கபல மாக ஆடினார்.
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்கா தீவில் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க்கில் நேற்று முன் தினம் துவங்கியது.
முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முரளி விஜய் மற்றும் அபினவ் முகுந்த் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
இந்திய அணி இறுதியில் 61.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் 2 வீரர்கள் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர்.
சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 115 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ராம்பால் வீசிய பந்தில் பிஷு விடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின் வரிசை வீரரான ஹர்பஜன் சிங் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ப் போட்டியில் சிறப்பாக ஆடினார். அவர் 74 பந்தில் 70 ரன்னை எடுத் து அணியின் மானத்தைக் காப்பாற்றினார். இறுதியில் அவர் எட்வர்ட்ஸ் வீசிய பந்தில் பிஷுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் 67 பந்தில் 40 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். லக்ஷ்மண் 12 ரன் னிலும், முகுந்த் 11 ரன்னிலும், விஜய் 8 ரன்னிலும், கோக்லி 4 ரன்னி லும், தோனி பூஜ்யத்திலும் ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். அணியின் ஸ்கோர் 15 -ல் விஜய் ஆட்டம் இழந்தார். 30 -ல் முகுந்த் அவுட்டானா ர். இதனைத் தொடர்ந்து சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 85 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. பின்பு ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 200 ரன்னைத் தா  ண்டி கெளரவமான ஸ்கோரை எடுத்தது.
மே.இ.தீவு அணி சார்பில் எட்வர்ட்ஸ் 56 ரன்னைக் கொடுத்து 4 விக்கெ ட் எடுத்தார். ரவி ராம்பால் 59 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, பிஷு 75 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.
பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 20  ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது துவக்க வீரர் பரத் 26 ரன்னுடனும், சர் வான் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்