முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய விமான விபத்தில் 44 பேர் பரிதாப பலி

புதன்கிழமை, 22 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ-ஜூன்,22 - ரஷ்யாவில் நேற்று நடந்த பயங்கர விமான விபத்தில் 44 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். மாஸ்கோவில் உள்ள டொமோடீடோவா விமான நிலையத்திலிருந்து ரஷ்-ஏர் என்ற பயணிகள் விமானம் ஒன்று பெட்ரோஜவாட்ஸ்க் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் 52 பேர் இருந்தனர். பெட்ரோஜவாட்ஸ்க் விமான நிலையத்தை நெருங்குவதற்கு 2 கிலோ மீட்டருக்கு முன்பாக இந்த விமானத்தில் கோளாறு ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து அந்த விமானம் நிலை தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்து வாகனங்களின் மீது மோதி தரையில் விழுந்து வெடித்தது. பிறகு அந்த விமானம் தீ பிடித்து எறியத்துவங்கியது. இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் துண்டு, துண்டாக சிதறின. இதில் பயணம் செய்த பயணிகளின் உடல்களும் சிதறி விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் 44 பேர் அதே இடத்தில் உடல் கரிகியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இந்து விபத்து குறித்து ரஷ்ய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான நிலைய கட்டுப்பாட்டு விதிகளை மீறயதாக இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரஷ்ய புலனாய்வு குழுவின் செய்தி தொடர்பாளர் விளாடிமிர் மார்கின் தெரிவித்தார்.

இதே போல கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி இதே பகுதியில் ஒரு விமான விபத்து நடந்ததாகவும், அதில் விமானி பெட்ரோஜவாட்ஸ்க்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசரநிலைக்கான அமைச்சகம் இணையதள ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்