முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடனான பிரச்சினைக்கு போர் தீர்வாகாது: கிலானி சொல்கிறார்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூன்.- 22 - இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எந்தவொரு பிரச்சினைக்கும் போரால் தீர்வு காண முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புடன் இருக்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதில் காஷ்மீர் பிரச்சினையும் அடக்கம்.
பிரதமர் மன்மோகன்சிங்கை பல முறை சந்தித்துள்ளேன். அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என அவரிடம் வலியுறுத்தி உள்ளேன். காஷ்மீர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும்.
இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் வரவுள்ளார். அவர் பாகிஸ்தான் வெளியுறவு செயலர் சல்மான் பஷீருடன் பேச்சு நடத்துவார். காஷ்மீர் பிரச்சினைக்கு காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமுதாயத்திடம் பாகிஸ்தான் வலியுறுத்தும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்கும். இதன் மூலம் சர்வதேச சமுதாயத்தின் நன் மதிப்பு, பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இவ்வாறு கிலானி கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்