முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நிலநடுக்கம் 10 ஆயிரம் வீடுகள் சேதம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,ஜூன்.- 23 - சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.  சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள மாங்பாங் மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. நில நடுக்கத்தால் ரோடுகள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் 94 வீடுகள் இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சீன அரசு 405 கூடாரங்களையும், 400 படுக்கை மெத்தைகளையும் அளித்துள்ளது. இதே போல் அமெரிக்கா அருகில் உள்ள சாலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. கடந்த 2007 ம் ஆண்டு சாலமன் தீவில் 8.1 ரிக்டரில் நில நடுக்கம் ஏற்பட்டு சுனாமியும் உருவானது. இதில் 52 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்