முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாமாயில் இறக்குமதி ஊழல்- மேலும் பலர் மீது வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,பிப்.27 - கேரள மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளதையொட்டி பாமாயில் இறக்குமதி ஊழல் அரசியலாக்கப்பட்டு வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கேரளாவில் மறைந்த காங்கிரஸ் தலைவர் கருணாகரன், முதல்வராக இருந்தபோது கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது மாநில உணவுத்துறை செயலாளராக பி.ஜே.தாமஸ் இருந்தார். இவர் தற்போது மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையராக இருக்கிறார். 

பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதில் சுமார் 4 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு கருணாகரன் உயிருடன் இருந்தபோது சுப்ரீம்கோர்ட்டில் தடை வாங்கினார். ஆனால் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இந்தநிலையில் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் பி.ஜே.தாமஸூம் சேர்க்கப்பட்டுள்ளார். 

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி பாமாயில் பிரச்சினையை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசியலாக்கி வருகிறது. இந்த வழக்கில் மேலும் பலர் சேர்க்கப்பட உள்ளனர். அதனால் பாமாயில் ஊழல் வழக்கு விசாரணையை தொடங்குமாறு திருவனந்தபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் அரசு சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பாமாயில் இறக்குமதி ஊழலில் மேலும் பலர் தொடர்பு இருக்கலாம் என்று கருதி புலனாய்வுதுறை விசாரணையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு கேரள மாநில முதல்வராக கருணாகரன் இருந்தபோது இந்த ஊழல் நடந்துள்ளது. அப்போது கருணாகரன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக உம்மன்சாண்டி இருந்தார். அவர் தற்போது கேரளத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார். அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் நோக்கத்தில் இந்த பிரச்சினையை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி எழுப்பி அரசியலாக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago