முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.- 23 - தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரப் பதிவு டி.ஐ.ஜியாக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள உத்தரவில்,  நில நிர்வாக ஆணையாளராக ஸ்வரன்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர். எஸ். முருகையா, போக்குவரத்து துறை ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வருவாய் பிரிவில் நிர்வாக கூடுதல் ஆணையாளராக பதவி வகித்தவர் ஆவார்.
இதே போல் ஹர்மந்தர்சிங், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையாளராகவும், ராஜேஷ் லக்கானி, நில சீர்திருத்த துறை இயக்குனராகவும், ஏ. முகமது அஸ்லாம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையாளராகவும், ஆர். வாசுகி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலாளராகவும், பி. ஜோதி நிர்மலா சமூக நலத்துறை இயக்குனராகவும், செல்வி அபூர்வா, சுனாமி திட்ட இயக்குனராகவும், தர்மேந்திர பிரதாப் யாதவ், பத்திரப்பதிவு துறை ஐ.ஜியாகவும், வி.கே. சண்முகம், வணிகவரிகள் துறை இணை ஆணையாளராகவும், பி. அமுதா, நகர்ப்புற நில அளவை மற்றும் நில வரிகள் துறை ஆணையாளராகவும், என். மதிவாணன், வேளாண்மை துறை நவீன மயம் மற்றும் நீர் வள மேலாண்மை திட்ட இயக்குனராகவும், எஸ். விஜயகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆணையாளராகவும், பி. அண்ணாமலை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், ஜெ. ஜெயகாந்தன், வருவாய்த் துறை இணை ஆணையாளராகவும், பி. சீத்தாராமன், உள்துறை இணை செயலாளராகவும், கே. மணிவாசன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையாளராகவும், சி. ராஜேந்திரன், புள்ளியியல் மைய ஆணையாளராகவும், எம். மாலிக் பெரோஸ்கான், கைத்தறி துறை ஆணையாளராகவும், ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையாளராகவும், எம். சந்திரசேகரன், பேரூராட்சிகள் துறை இயக்குனராகவும், ஜெ. சந்திரகுமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராகவும், கே. கோபால், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனராகவும், டி. என். வெங்கடேஷ், சென்னை மாநகராட்சி இணை ஆணையாளராகவும்(கல்வி), சுதீப் ஜெயின், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்இயக்குனராகவும், டி.கே. பொன்னுசாமி, கோவை மாநகராட்சி ஆணையாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்