முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாம்பரம் ரெயில்வவே மேம்பாலப் பணி: அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

தாம்பரம், ஜூன் 24 - சென்னையை அடுத்த தாம்பரத்தில் கிழக்கு மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் இன்னும் 1 மாதத்தில் நிறைவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையில் இருந்து மேற்கு தாம்பரம் பகுதிக்கு வரும் வகையில் தாம்பரம் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கிழக்கு தாம்பரம் பகுதியில் பள்ளிகள் அதிகம் உள்ளதால் வேளச்சேரி சாலையில் பாலம் பணி நிறைவு பெறாததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கிழக்கு தாம்பரம் பகுதியில் பாலப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பிற்பட்டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான டி.கே.எம்.சின்னையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கிழக்கு தாம்பரம் பகுதியில் பாலம் அமைக்கும் பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் கிழக்கு தாம்பரம் பகுதியில் நடைபெறும் வேலைகளை போர்க்கால அடிப்படையில் துரிதமாக செய்யும்படி உத்தரவிட்டார். இதுகுறித்து அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் கிழக்கு தாம்பரம் பகுதியில் பணிகள் துரிதமாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 மாதத்தில் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றார்.

அதன் பின்னர் தாம்பரம் மார்க்கெட் பகுதிக்கு இடையூராக சண்முகம் சாலையை மறைத்து பாலம் கட்டப்பட்ட பகுதியை அவர் பார்வையிட்டார். அப்பகுதியில் பாலத்தை மறுசீரமைக்க வியாபாரிகள் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யாக்கூப் மனு அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago