முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு மின்னணு கையடக்க கருவிகள்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.24 - வணிகவரித்துறை செயலாக்கப்பிரிவு சுற்றும்படை குழுவினருக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா நேற்று கையடக்க முனையத்தை அறிமுகம் செய்வும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுனில் பாலிவால், அரசு செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை எஸ்.கிருஷ்ணன் மற்றும் வணிகவரித்துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில கூடுதல் ஆணையர், இணை ஆணையாளர்கள், நிர்வாக செயலகத்தை சேர்ந்த 36 பேர் கலந்து கொண்டனர்.

வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா வணிகவரித்துறை செயலாக்கப்பிரிவின் சுற்றுக்குழு அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மின்னணு கையடக்க முனையங்களை வழங்கினார். இந்த கையடக்க முனையங்கள் சிம்கார்டு மூலம் வணிகவரித்துறையின் மத்திய தகவல் தொகுப்பு கணினி மையத்துடன் இணைக்கப்படும். கீழ்கண்ட மென்பொருள் அமைப்புகள் இந்த கையடக்க முனையங்களில் அமைக்கப்பட்டுள்ளது:

வரி செலுத்துவோர் அடையாள எண் சரிபார்க்கும் அமைப்பு, மத்திய விற்பனைவரி எண் சரிபார்க்கும் அமைப்பு, மாதாந்திர நமூனாக்களின் விவரங்கள் அறியும் அமைப்பு. 

மேற்கண்ட மென்பொருள் அமைப்புகளின் வாயிலாக சரக்கு போக்குவரத்துக்கான ஆவணங்களை வணிகவரித்துறையின் மத்திய தகவல் தொகுப்பிலிருந்து சரக்குகளுடன் கொண்டு செல்லப்படும் பின்வரும் ஆவணங்களை செயலாக்கப்பிரிவு அலுவலர்களால் சரிபார்க்க இயலும்.

சரக்கு அனுப்புபவர், பெறுபவர் ஆகியோரின் வரிசெலுத்துவோர் அடையாள எண்களின் உண்மைத்தன்மை, சரக்கு அனுப்புவோர், பெறுவோர் ஆகியோரின் பதிவு பெற்ற வணிக இடம், கிளைகள், கிடங்குகள் ஆகியவற்றின் பதிவுகள் பற்றிய உண்மைத்தன்மை.

ஆய்வின்போது அதிகாரிகளிடம் அமைச்சர் கோகுல இந்திரா பேசும் போது கூறியதாவது:-

அரசுக்கு அதிக வருமானம் வரும் இந்த துறையை முதல்​அமைச்சர் என்னிடம் ஒப்படைத்துள்ளார். எனவே அரசுக்கு தகுந்த முறையில் கூடுதல் வருமானம் கிடைக்க நீnullங்கள் துணை நிற்க வேண்டும். உங்களுடன் ஒன்று சேர்ந்து இந்த சாதனையை படைக்க முடியும் என்று நம்புகிறேன். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை.

இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.

இந்த நவீன கருவி பயன்பாட்டுக்கு வருவதால் வரி ஏய்ப்பு தடுக்கப்படும். சோதனை சாவடிகளில் வாகனங்களை சோதனையிடும் நேரம் குறையும். வரி ஏய்ப்பும் தடுக்கப்படும். முன்னதாக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் கோகுல இந்திராவை வணிகவரி செயலாளர் சுனில்பாலி வால், ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அதை தொடர்ந்து வணிக வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்