முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொலை

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை. ஜூன், 24 -திருவண்ணாமலை வங்கியில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு:-

திருவண்ணாமலை அடுத்த பெரியகோளாப்பாடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பெரியகோளாப்பாடி கிராமம் உட்பட 20- க்கும் மேற்பட்ட கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள், விவசாயக் கடன், சேமிப்பு மற்றும் நகைகளை அடமானம் வைத்துள்ளனர். இந்த வங்கியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்ததது. 

இதையடுத்து வங்கியில் தனியார் செக்யூரிட்டி அமைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. பெரியகோளாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (50) என்பவர் தனியார் செக்யூரிட்டி மூலமாக இரவு காவலராக நியமிக்கப்பட்டார். இவர் இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். 

நேற்று காலை 7 மணிக்கு மேலாகியும் ஏழுமலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஏழுமலையின் உறவினர்கள் வங்கிக்கு சென்று பார்த்தனர். அப்போது வங்கியின் முன் புறமுள்ள செக்யூரிட்டி அறையில் ஏழுமலை கயிற்றால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசில் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வங்கிக்கு நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைக்கமுயன்றுள்ளனர். இதனை தடுத்த காவலாளி ஏழுமலையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். 

பின்னர் வங்கியின் மெயின் கேட்டிலிருந்து 2 பூட்டுகளை உடைத்துள்ளனர். ஆனால் உடைக்கமுடியவில்லை. இதனால் வங்கியில் இருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம், சுமார் 6 கோடி மதிப்பிலான அடகு வைத்துள்ள நகைகள் தப்பின என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். திருவண்ணாமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் வங்கியிலிருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. 

இந்நிலையில் காவலாளி ஏழுமலையை கொலை செய்த கொலையாளிளை உடனடியாக கைது சொய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கி எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி(குற்றப்பிரிவு) செய்சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என கூறினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் ஏழுமலையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். 

இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago