முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாட்டுத்தாவணியில் கடைகளை அகற்ற தடை நீக்கம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூன்.24 - மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நடைபாதையில் அங்கீகாரமின்றி வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொண்ட ஐகோர்ட் மதுரை கிளை மதுரை மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தது. 

மதுரை திடீர் நகரை சேர்ந்த அன்பழகன் ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரை மாநகராட்சி எனக்கு 168 சதுர அடி காலி இடத்தை தேனீர் கடை வைக்க கடந்த 19.2.2002 ல் அனுமதித்தது. கடைக்கான வாடகையை நிலுவையின்றி மே மாதம் வரை செலுத்தி உள்ளேன். கடையை காலி செய்யுமாறு அண்ணாநகர் போலீசார் கடந்த 4 ம் தேதியில் இருந்து நிர்பந்தித்து வருகிறார்கள். கடையை காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், கடையை காலி செய்ய இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில் தடையை நீக்குமாறு அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார். மதுரை மாவட்ட கலெக்டர், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களுக்கு ஆபத்தை தோற்றுவிக்கும் வகையில் சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருவதை விளக்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். 

மாநகராட்சி பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கீகாரமின்றி கடைகள் வைக்கப்பட்டிருந்ததை அவர் அந்த உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் பேரில் கடைகளை காலி செய்ய ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டார். ஏற்கனவே இந்த மனுதாரர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அளிக்கவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் தடை விதித்ததை விலக்கி கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். 

மாநகராட்சிக்கு இடம் தேவைப்படும் பட்சத்தில் காலி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே அனுமதி அளிக்கப்பட்டது. நிபந்தனைப்படி கடைகள் காலி செய்யப்படும் நிலையில் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார் என மாநகராட்சி வழக்கறிஞர் ரவிசங்கர் குறிப்பிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் தடை நீக்கி உத்தரவிட்டார். அப்போது மாட்டுத்தாவணியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து நியாயமான முறையில் நடவடிக்கை மேற்கொண்டதை நீதிபதி பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago