முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படுகொலையால் சித்திரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.24-ஜூன் 26 ஞாயிறு சித்ரவதைக்குள்ளானோருக்கு ஆதரவு நாளை முன்னிட்டு வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:- மனிதகுல வரலாற்றில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுதான் சிங்கள அரசு இலங்கைத் தீவில் நடத்திய தமிழ் இனப் படுகொலை ஆகும். கடந்த ஐம்பது ஆண்டுக்கால துன்பங்கள் சூழ்ந்த தமிழ் ஈழ மக்களின் வாழ்வில், இலட்சக்கணக்கான

தமிழர்கள், குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் மட்டும், 30,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 1,40,000 தமிழர்கள், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலைக்கு உள்ளானதை நினைக்கும்போதே நெஞ்சில் வேதனைத் தீ எரிகிறது. 80,000 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு உள்ளனர்.

அது மட்டும் அன்றி, தாய்த் தமிழகத்து மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வந்த தாக்குதல்களில், 543 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்; 700 மீனவர்களைக் காணவில்லை. சிங்கள அரசின் இனப்படுகொலையால் பலியான தமிழர்கள், உயிர்nullத்த தாய்த் தமிழகத்து மீனவர்களுக்கு நினைவேந்தல் செய்திடும் வகையில், சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை கடற்கரையில், கண்ணகி சிலை அருகில், மெழுகுவர்த்திகள் ஏந்தி, நினைவு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கு ஏற்க, மே 17 இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது.

மெழுகுவர்த்தி எரிந்து ஒளி தருதல் போல, தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு, தமிழ் ஈழ விடுதலை உணர்ச்சித் தீயை தமிழர் மனங்களில் வளர்த்த முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி, மெழுகுவர்த்தி ஏந்திடும் நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கழகக் கண்மணிகளும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் இன உணர்வாளர்கள் இதில் பங்கு ஏற்க வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்