முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலைப்பட்டியில் மீன்பிடி திருவிழா

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜூன்.24 - திண்டுக்கல் அருகிலுள்ள சாணார்பட்டி ஊராட்சி புகையிலைப்பட்டியில் கடந்த 100 வருடங்களாக நடத்தப்படும் மீன்பிடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சாதிமத பேதமின்றி அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி சமூகத் திருவிழாவாக கொண்டாடுவது இத்திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். இங்குள்ள கண்மாயில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற மீன்பண்ணையில் இருந்து மீன்குஞ்சுகளை வாங்கி விடுவர். இவை வளர்ந்து பெரிய மீன்களான பின் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும். வருடந்தோறும் இவ்விழா வியாழக்கிழமை மட்டுமே நடத்தப்படும் என்பதும் சிறப்பம்சம்.  திருவிழாவை முன்னிட்டு ஒரு சமுதாயத்தினர் மற்றொரு சமுதாயத்தினர் தாம்பூலம் வைத்து அழைத்து வந்தனர். அனைத்து சமுதாயத்தினரும் ஊர் முக்கிய இடத்தில் ஒன்று கூடி தேங்காய், பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை தட்டில் வைத்தபடி மேளதாளம் முழங்க மீன் பிடிக்கும் குளத்திற்கு வந்தனர். அங்கு மீன்பிடிப்பதற்காக புகையிலைப்பட்டி மட்டுமின்றி சாணார்பட்டி, கோபால்பட்டி, செங்குரிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஊர் நாட்டாமை மற்றும் முக்கியஸ்தர்கள் கொடியசைத்த பின் குளத்தில் தயாராக நின்றிருந்த அனைவரும் மீன்பிடிக்கத் துவங்கினர். கெண்டை மீன், குறவை மீன், கெளுத்தி மீன், கட்லா, விரால் உள்ளிட்ட பலவகை மீன்கள் சுமார் 25 கிலோ, 30 கிலோ எடை கொண்டவை பிடிக்கப்பட்டன. மீன்களை பிடித்தவர்கள் சமைத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சமைத்துக் கொடுத்தனர். இதனால் இப்பகுதி முழுவதும் மீன் மணம் கமழ்ந்தது.

இதுகுறித்து கடந்த பல வருடங்களாக மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்று வரும் வாலிபர் கூறுகையில், இத்திருவிழா சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்