முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி பயங்கர தீ விபத்தில் 30 வீடுகள் எரிந்து நாசம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஜூன்.24 - திருச்சியில் நேற்று தீவிபத்தில் 30 வீடுகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ மனோகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். திருச்சி மேலப்புதூர் வேர்ஹவுஸ் கல்லறை தோட்டத்திற்கு பின்புறம் 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இதில் திருச்சி மாநகராட்சி ஊழியர் ஒருவர் வீட்டில் இருந்து நேற்று காலை திடீரென்று தீ கிளம்பியது. அதை தொடர்ந்து அருகில் இருந்த குடிசைகளுக்கும் மளமளவென தீபரவியது. இதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், தீயை அணைக்க போராடினார்கள். காற்று பலமாக அடித்ததால் தீ அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியதுர. தகவல் அறிந்த திருவரங்கம் மற்றும் கண்டோன்மென்ட், நவல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்த 3 தீயணைப்பு வண்டிகள் வந்தன. அவர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும்30 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இதில் ரேசன் கார்டுகள், சான்றிதழ்கள், டி.வி., கிரைண்டர், மிக்ஸி, நகைகள், பணம், அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. 

இதுகுறித்து பாலக்கரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்து சம்பவம் கேள்விபட்டதும் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தீவிபத்தினால் எரிந்து போன ரேசன் கார்டுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அரிசி, பருப்பு, பொருட்கள், நிவாரண பொருட்களை உடனடியாக வழங்கிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் சம்பவம் குறிந்த தகவல் தெரிந்தவுடன் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தீவிபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். நிவாரணம் விரைவில் கிடைக்க வழிவகை செய்வதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்