முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய பேட்மிண்டன்: சாய்னா கால் இறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜகர்த்தா, ஜூன். 24 - இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான ஒற் றையர் பிரிவின் 2 -வது சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன் னேறினார். 

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடர் இந்தோனேசிய நாட்டின் தலைநகரான ஜகர்த்தாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரு கிறது. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான நிலையில் உள்ளது. 

சர்வதேச அளவில் முக்கியமான போட்டிகளில் ஒன்றான இதில் சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றம் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சியுடன் வந்துள்ளனர். 

இந்த சூப்பர் சீரிசில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று வருகின்றனர். இந்தப் போட்டி தற் போது காலிறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 2 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய் னா நெக்வாலும் பல்கேரிய வீராங்கனையும் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சாய்னா நெக்வால் சிறப் பாக ஆடி, 21 - 18, 21 - 9 என்ற கேம் கணக்கில் பல்கேரிய வீராங்க னை பெட்டியா நெடல்சேவாவை தோற்கடித்தார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா நெக்வால் நடப்பு சாம்பி யனாவார். இந்தப் போட்டி சுமார் 31 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாய்னா கடந்த 2009 மற்றும் 2010 -ம் ஆண்டுகளில் இங்கு பட்டம் வெ ன்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago