முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நேற்று அதிகாலை நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஜூன் 24 - ஜப்பானில் நேற்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

ஜப்பானில் சில மாதங்களுக்கு முன்பு கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது கடலில் சுனாமி பேரலைகள் ஏற்பட்டன. இதனால் ஜப்பானில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதிலிருந்து ஜப்பான் மீண்டு வருவதற்குள் நேற்று அதிகாலை இந்த பூகம்பம் ஜப்பானின் சில பகுதிகளை குலுக்கியது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் லரான்சு தீவில் லவாட்டில் என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த பூகம்பத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு  வீதிகளுக்கு ஓடினர். இது சற்று சக்திவாய்ந்த பூகம்பம் என்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்