முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, ஜுன் 24 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை தொழில் அமைச்சர் சண்முகவேலு திறந்துவிட்டார்.

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 

அதன்படி அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி கடந்த 20 ம் தேதி அன்று காலை நடந்தது. தமிழக தொழில்துறை அமைச்சர் உடுமலை சி.சண்முகவேலு அணையை திறந்துவைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு நீர்வரத்து உள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி 8 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் நாற்றுக்களை நட்டு பயன்பெற வேண்டும். நல்ல விதை நெல்களை பயிரிட்டு அமோக விளைச்சலை பெற வேண்டும். விவசாயிகளின் நலன்கருதி வேடப்பட்டியில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தாராபுரத்தில் 2 நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

தேவைப்பட்டால் கல்லாபுரத்திலும் நெல்கொள்முதல் மையம் திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனுக்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கல்லாபுரம் மற்றும் 6 பழைய வாய்க்கால்களில் மராமத்து பணிகளை செய்ய நிதி உள்ளது. அதற்கான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால்களில் மராமத்து பணிகளை செய்யும்போது பொதுப்பணித்துறையினர் அந்தந்த பகுதி வாய்க்கால் பாசன சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்துச் சென்று வாய்க்கால்களைப் பார்த்து  கலந்துபேசி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த பணிகளை பாசன சங்கத்தினரே பொறுப்பேற்று செய்ய வேண்டும். வாய்க்கால் கரைகளை சுத்தம் செய்ய வேண்டும். கரும்புக்கு சிறப்புத் தண்ணீர் வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கேட்டுள்ளனர். அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானதும் அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும். 

இவ்வாறு அமைச்சர் பேசினார். 

இந்நிகழ்ச்யில் மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் எஸ்.மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஞானசேகரன், டி.ஞானவேல், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் எஸ்.ஆர்.வேலுசாமி, உடுமலை ஆர்.டி.ஓ. என்.ஜெயமணி, தாசில்தார் சி.நல்லசாமி, மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் வி.பொன்முடி மற்றும் உடுமலை ஒன்றியக் கழக செயலாளர் எஸ்.கே.எஸ்.கந்தசாமி, மெட்ராத்தி அண்ணாதுரை, உடுமலை நகரக் கழக செயலாளர் கே.வி.சண்முகம், வழக்கறிஞர் மனோகரன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago