முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டெஸ்ட்: மே.இ.தீவு வெற்றி பெற 326 ரன் இலக்கு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கிங்ஸ்டன், ஜூன். 24 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கிங்ஸ்டன் நகரில் நடந் து வரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2 -வது இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 252 ரன்னை எடுத்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். முகுந்த் ,மிஸ் ரா மற்றும் ரெய்னா ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 -வது இன்னிங்சில் 326 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்திய அணி வைத்துள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ளது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்கா தீவில் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார் க்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இதில் முன்னதாக முதல் இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி 61.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்னை எடுத்தது. ரெ ய்னா 82 ரன்னையும், ஹர்பஜன்சிங் 70 ரன்னையும், டிராவிட் 40 ரன் னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 67.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 173 ரன்னில் சுருண்டது. அந்த அணி சார் பில், பரத் 64 ரன்னையும், கீப்பர் பாக் 27 ரன்னையும், சந்தர்பால் 23 ரன்னையும் எடுத்தனர். 

அடுத்து 2 -வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 94.5 ஓவரில் அனைத் து விக்கெட்டையும் இழந்து 252 ரன்னை எடுத்தது. இதில் ஒரு வீரர் சத மும், 3 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சதம் அடித்தது ஆட்டத்தின் விசே ஷமாகும். அவர் சதம் அடித்தும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்தி ய அணி பெரிய அளவில் ஸ்கோரைக் குவிக்க முடியவில்லை. 

டிராவிட் 274 பந்தில் 112 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பிஷு வீசிய பந்தில் சர்வானிட ம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய ரெய்னா இந்த இன்னிங்சில் 53 பந்தில் 27 ரன்னில் ஆட்டம் இழந்தார். அமித் மிஸ்ரா 60 பந்தில் 28 ரன் னை எடுத்தார். கேப்டன் தோனி 16 ரன்னிலும், கோக்லி 15 ரன்னிலும் அவுட்டானார்கள். 

3 -வது வீரராக களம் இறங்கிய டிராவிட் இந்திய அணியின் இன்னிங்சி ற்கு தூணாக நின்றார். அவர் கடைசியாக 10 -வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. 

மே.இ.தீவு அணி தரப்பில், சம்மி 52 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிஷு 65 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, எட்வர்ட்ஸ் மற்றும் ராம்பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி 2 -வது இன்னிங்சில் 326 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்திய அணி வைத்தது. பின்பு 2 -வது இன் னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 3 - வது நாள் ஆட்ட நேர முடிவி ல் 33 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்னை எடுத்தது. 

அப்போது டிவைன் பிராவோ 30 ரன்னுடனும், சந்தர்பால் 24 ரன்னுட னும் களத்தில் இருந்தனர். முன்னதாக பரத் 38 ரன்னிலும், சிம்மன்ஸ் 27 ரன்னிலும், சர்வான் பூஜ்யத்திலும் ஆட்டம் இழந்தனர். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்