முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சம் பெற்ற உதவி தொடக்க கல்வி அதிகாரி கைது

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி, ஜூன்.24 - வத்திராயிருப்பு பள்ளி நிர்வாகியிடம் மாணவ,மாணவியர் பதிவுச்சான்றிதழில் கையெழுத்து போட ரூ 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி தொடக்க கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

வத்திராயிருப்பு அருகேயுள்ளது ராமசாமியாபுரம். இங்கு மில்டன் தொடக்க பள்ளி உள்ளது. இதன் நிர்வாகியாக ஆத்தாங்கரைபட்டி அன்புச்செல்வன்(41). உள்ளார். இவர் இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து முடித்த 46 மாணவ,மாணவிகளுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்க கையெழுத்து பெற வேண்டி வத்திராயிருப்பு வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலக அதிகாரி நம்பியார்(54) என்பவரை கடந்த 15ம்தேதி அணுகியுள்ளார். அப்போது நம்பியார் பதிவுச்சான்றிதழலில் கையெழுத்து போட ரூ 2 ஆயிரம் லஞ்சம் தா என கேட்டுள்ளார். மேலும் அன்புச்செல்வன் மீண்டும்  22ம்தேதி சென்று கையெழுத்து போடுமாறு கேட்டுள்ளார். அவர் அதற்கு நேற்று 23ம்தேதி அலுவலகத்திற்கு வந்து கவரில் ரூ 2 ஆயிரத்தை வைத்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். 

உடனடியாக அன்புச்செல்வன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ரசாயண மை தடவிய ரூ 2 ஆயிரத்தை அன்புச்செல்வனிடம் கொடுத்து அதிகாரி நம்பியாரிடம் கொடுக்குமாறு ஆலோசனை வழங்கினர். அதன்படி அன்புச்செல்வன் நேற்று மதியம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் சென்று அதிகாரி நம்பியாரிடம் ரூ 2 ஆயிரத்தினை கொடுத்துள்ளார். இதனை நம்பியார் வாங்கிய சமயம் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஷியாமளாதேவி, இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் ஆகியோர் லஞ்ச வாங்கிய அதிகாரி நம்பியாரை கையும்,களவுமாக பிடித்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து வழக்குபதிவுசெய்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி எஸ்.சரவணன் லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி நம்பியாரை 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பின்னர் அதிகாரி நம்பியார் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்