முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அரசு மருத்துவ மனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.24 - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கலெக்டர் சகாயம் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது நோயாளிகள் கூறிய குறைகளை களைய உடனடி நடவடிக்கை எடுத்தார். மதுரை மாவட்ட கலெக்டராக சகாயம் பொறுப்பேற்றதில் இருந்தே மதுரை அரசு மருத்துவமனையை கண்காணித்து வருகிறார். அடிக்கடி மருத்துவமனைக்கு திடீர், தீடீரென சென்று ஆய்வில் ஈடுபடுவதோடு நோயாளிகளின் குறைகளையும் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். இவரின் தீவிர நடவடிக்கையின் பேரில்தான் மருத்துவமனையில் சுற்றி திரிந்த புரோக்கர்கள் பிடிபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திடீரென மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கலெக்டர் சகாயம் சென்றார். தீவிரசிகிச்சைப்பிரிவு,  இதயநோய் பிரிவு, அவசரசிகிச்சைப்பிரிவு உள்பட பல்வேறு வார்டுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறை கேட்டார். அப்போது பெரும்பாலான நோயாளிகள் மின்விசிறி இல்லை, கழிப்பறையில் தண்ணீர் இல்லை எனறு தெரிவித்தனர். இதைதொடர்ந்து உடனடியாக மாநகராட்சி ஆணையாளரை தொடர்பு கொண்டு கூடுதலாக 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய கேட்டுக்கொணாடார்.

   மேலும், 386 புதிய மின்விசிறிகள் வாங்கவும் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.  சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வின் போது, மருத்துவமனை துணைகண்காணிப்பாளர் ராமானுஜம், நிலைய மருத்துவஅதிகாரிகள் திருவாய்மொழிபெருமாள், பிரகதீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்