முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறையை கைவிட்டு பேச்சுக்கு வாருங்கள் நக்சல்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர், ஜூன்.- 25 - வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நக்சலைட்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சத்தீஷ்கர் மாநிலம் நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த ஒரு மாநிலமாகும். இந்தமாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மடிந்துள்ளனர். இவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் இம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 2 நாள் அரசு முறை பயணமாக சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வந்தார். இம்மாநிலத்தில் சட்டமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மத்திய மண்டபத்தை நேற்று அவர் திறந்துவைத்தார். பின்னர் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நக்சலைட்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சட்டசபையில் பிரதீபா பாட்டீல் பேசியதாவது:
பழங்குடியின மக்களின் முன்னேற்றம் மிக மிக அவசியம். அவர்களை முன்னேற்றுவதற்காக இந்த சமூதாய நீரோட்டத்தில் இணைந்து அவர்கள் முன்னேற்றத்திற்கு நக்சலைட்கள் பாடுபட வேண்டும். வன்முறை என்ற போக்கை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நக்சலைட்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகிவிட்டார்கள். இதுஒரு மிகப்பெரிய பிரச்சினை. இதற்கு பேச்சுமூலம்தான் தீர்வுகாணப்படவேண்டும். அமைதியை பராமரிப்பது மிக மிக அவசியம். அப்போதுதான் இந்த நாடு முன்னேற முடியும். வரதட்சணை கொடுமை, பால்ய விவாகம், பெண் சிசுக்கொலை போன்ற சமூக கொடுமைகள் நிலவுகின்றன. இவற்றை ஒழித்தாக வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வி அமைய வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்ற பலன்கள் சமூதாயத்தின் ஒவ்வொரு பிரிவினர்களையும் போய் சேர வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சபையில் உரைநிகழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்