முக்கிய செய்திகள்

ரஜினி காந்த் மனைவி சென்னை திரும்பினார்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஜூன்.- 25 - நடிகர் ரஜினி காந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வெடுத்து வரும் நிலையில் அவரைப் பார்த்துக் கொள்ள உடன் தங்கியிருந்த அவரது மனைவி லதாரஜினிகாந்த் மட்டும் சென்னை திரும்பினர்.  ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோர் தங்கியிருந்தனர். தற்போது ரஜினி தனது வழக்கமான உடல் நிலைக்கு திரும்பிவிட்டார். படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது,எளிய உடற்பயிற்சிகள் செய்வது, தியானம் என ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உளளன. இந்த நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை கவனிக்கவும் வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் லதா சென்னை திரும்பியுள்ளார். 

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளும், விமான நிலைய அதிகாரிகளும் ரஜினி உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தனர். லதா அவர்களுக்கு பதிலளிக்கையில் ரஜினி நலமுடன் இருப்பதாகவும், விரைவில் சென்னை திரும்புவார் என்றும் கூறிய அவர் அவர்களது அன்புக்கு நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: