முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அடுத்தமாதம் இந்தியா வருகிறார்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூன்.- 25 - இருதரப்பு அமைதி பேச்சில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவு புதிய அமைச்சர் அடுத்தமாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபாமாவ் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீருடன் அவர் பேச்சு நடத்தினார். பயஙகரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து அப்போது பேசப்பட்டது. இந்தநிலையில் பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சர் அடுத்தமாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதாக அந்நாட்டின் ஹைகமிஷனர் சாஹித் மாலிக் நேற்று இஸ்லாமாபாத்தில் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை பற்றி கேட்டபோது பேச்சுவார்த்தை நல்ல முறையில் போய் கொண்டிருக்கிறது என்று மாலிக் தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு இணை அமைச்சராக ரபானி கார் இருந்து வருகிறார். விரைவில் கேபினட் அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுகிறார். அதாவது வெளியுறவு அமைச்சராக பதவி உயர்வு பெறுகிறார். அவ்வாறு பதவி உயர்வு பெற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு வருகிறார். இதுபற்றி இந்திய தரப்பில் கூறப்பட்டபோது அவரை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் ஏதும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் இருநாடுகளும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்