Idhayam Matrimony

சர்வதேச அளவில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா ஆசை: அமெரிக்கா தகவல்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஜூன்.- 25 - சர்வதேச அளவில் தாக்குதல் நடத்தி விளம்பரமாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் விரும்புகிறது என்று அமெரிக்காவின் முப்பைடைகளின் கூட்டு தலைவர் அட்மிரல் மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.  உலக அளவில் தீவிரவாதம் குறித்து அமெரிக்க பாராளுமன்ற எம்.பி.க்களிடம் மைக் முல்லர் விளக்கம் அளித்தார். அப்போது முல்லர் மேற்கண்டவாறு கூறினார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-தொய்பா தீவிரவாத இயக்கமானது சிறியது. இந்தியாவில் வர்த்தக நகரமான மும்பையில் தாக்குதலை இந்த இயக்கம்தான் நடத்தியது. தற்போது அல்கொய்தா தீவிரவாத இயக்கம் ஒடுக்கப்பட்டு வருவதால் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கமானது சர்வதேச அளவில் தாக்குதலை நடத்தி விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறது என்று முல்லார் கூறினார். தீவிரவாத இயக்கங்களிடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும் தாக்குதல் நடத்துவதில் ஒன்றுக்கொன்று உதவியாக செயல்படுகின்றன. இந்த தீவிரவாத இயக்கங்கள் அனைத்துக்கும் மையமாக பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்தான் இருக்கின்றன. அதனால்தான் அந்த இரு நாடுகள் மீது அமெரிக்கா குறி வைத்து செயல்படுகிறது என்று எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் முல்லர் கூறினார். இந்த தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவை பல முறை தாக்கி உள்ளன. பல நகரங்களில் குண்டுகளை வெடித்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் முல்லர் மேலும் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க எம்.பி.க்களிடையே பேசிய அமெரிக்காவுக்கான பசிபிக் பிராந்திய கமாண்டர் அட்மிரல் ராபர்ட் வில்லார்டு கூறுகையில் நேபாளம், வஙகதேசம், இலங்கை மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் தீவிரவாத இயக்கங்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. அந்த நாடுகள் மீதும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதோடு தீவிரவாதத்தை ஒடுக்க அந்த நாடுகளை பலப்படுத்தும் பணியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்