முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

யூனிமாக் பாஸ், ஜூன். - 25 - அலாஸ்கா அடகாவுக்கு கிழக்கே 172 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் நேற்று 7.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிக ளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே பகுதியில் அரை நிமிடம் கழித்து 7.2 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெ ரிவித்தது.
யூனிமாக் பாஸ் அலாஸ்காவில் இருந்து அம்சிடகா பாஸ்வரையிலா  ன கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை அமலில் இருப்ப தாக மேற்குக் கடலோர மற்றும் அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மைய ம் தெரிவித்தது.
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதிகளில் தா ழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதி களுக்குச் செல்லுமாறும், துறைமுகப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளி யேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்