முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய நடுவர் ஹார்ப்பர் மீது இந்திய கேப்டன் தோனி அதிருப்தி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

கிங்ஸ்டன், ஜூன். - 26 - மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்ப்பரின் செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் கேப்ட ன் தோனி அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டி - 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவை நடத்த திட்டமிட ப்பட்டது.
இதில் முதலில் நடந்த டி - 20 யில் இந்தியா வென்றது. பின்பு ஒரு நாள் தொடரில் 3 - 2 என்ற கணக்கில் மே.இ.தீவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிங்ஸ்டன் நகரில் நடந்த முதல் டெஸ் டில் இந்திய அணி 63 ரன் வித்தியாசத்தில் மே.இ. தீவை வென்று 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற முன்னிலையை பெற்று உள்ளது.
இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய நடுவர் ஹார்ப்பர் நடந்து கொண்ட விதம் இந்திய வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய வீரர்கள் 3 பேருக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டதாக இந்திய வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெய்னா, ஹர்பஜன் சிங், மற்றும் தோனி ஆகியோருக்கு மட்டையில் பந்து படாமலே மே.இ.தீவுக்கு சாதகமாகவே அவுட் கொடுத்தார். இதே போல மே.இ.தீவு அணி பேட்டிங் செய்த போது, ஹார்ப்பர் அந்த அணிக்கு சாதகமாக நடந்து கொண்டார்.
ஹார்ப்பர் குறித்து தோனி மறைமுகமாக தனது அதிருப்தியை வெளி யிட்டு உள்ளார். சரியான முடிவு கொடுக்கப்பட்டு இருந்தால் நாங்கள் முன்னதாகவே ஜமைக்கா டெஸ்டில் வெற்றி பெற்று இருப்போம் என்று கூறி இருந்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஹார்ப்பர், இயன் கோல்டு (இங்கிலாந் து) ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். தோனி தனது பேட்டியி ல், யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. 3 -வது டெஸ்ட் போ  ட்டிக்கும், ஹார்ப்பர் நடுவராக இருப்பார்.
இந்திய அணியின் மற்றொரு சீனியர் வீரர் கூறியதாவது - இனி வரும் போட்டிக்கு ஹார்ப்பரை நாங்கள் விரும்பவில்லை என்பது எனது கரு த்து அல்ல. அணி வீரர்கள் முழுவதுமே இதை விரும்புகிறார்கள் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago