முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.27 - உலக மது, போதை விழிப்புணர்வு தினத்தைமுன்னிட்டு மதுரை மிஷன் மருத்துவமனை சார்பாக நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பெண்களும் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள் என்று  தெரிவிக்கப்பட்டது.   பேரணிக்கு தலைமை வகித்து பேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் எம். கார்த்திகேயன் கூறுகையில், மது உடல் நலத்தை கெடுப்பதுடன், மன நலத்தையும் பாதிக்கிறது. குடும்ப பிரச்சனை, விவாகரத்து, சாலை விபத்து, பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது. குடும்பத்தில் அப்பா குடித்தால், மகனும் குடிக்கும் சூழல் உருவாகிறது. 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இப்போதை பழக்கத்திற்கு மிகவும் அடிமையாக உள்ளனர். ஆண்களில்  பெரும்பாலானோர்  வாழ்வில் ஒரு முறையாவது மது அருந்தியுள்ளனர். 35 சதவீதம் பேர் தொடர்ச்சியாக மது அருந்துகின்றனர். இதனை தனி மனித சீர்கேடாக பார்க்காமல் இதனை ஒரு நோய் எனக்கருதி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும், தகுந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளும் நிலை உள்ளது. இது தவறு. இவ்வாறு அவர் பேசினார்.   பேரணியை துவக்கி வைத்த தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் கர்னல் பி.வேணுகோபால் கூறுகையில், என்.சி.சி. மாணவர் படையைச் சார்ந்தவர்கள் இன்று சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை, தீவிரவாதம் மற்றும் மது, போதை ஒழிப்பதற்கு முழுமையாக பாடுபடவேண்டும் என்றார்.  நேற்று நடைபெற்ற பேரணியில் லேடிடோக் கல்லூரி, செளராஸ்டிரா கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் பல்வேறு சமூக சீர்கேடுகளை விளக்கும் அரக்கன் போன்ற பொம்மை செய்யப்பட்டு ஊர்வலமாக வந்தது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய பேரணி தமுக்கம், சிம்மக்கல், பெரியார் விழியாக பழங்காநத்தம், ஆரப்பாளயைத்தை அடைந்து மீண்டும் மாட்டுத்தாவணி வழியாக ஒத்தக்கடையில் முடிவடைந்தது. வளம் மற்றும் வளர்ச்சித்துறை தலைவர் விக்டர்சந்திரன், மேலாளர் சுந்தராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொற்கைப்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago