முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை எதிரொலி: பஸ்-வேன் கட்டணங்கள் உயர்வு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜுன் 27 - டீசல் விலை உயர்வின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பஸ், வேன் கட்டணங்களை உயர்த்துவது என்று பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். மேலும் இந்த டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 ம் அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த விலை உயர்வை திரும்பப் பெறப்போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. லாரி வாடகையை லாரி அதிபர்கள் உயர்த்தி உள்ளதால் நீண்ட தூரத்திற்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களின் வாடகை 8 முதல் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மளிகைப் பொருட்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்தே தமிழ்நாட்டிற்கு வரவேண்டி இருப்பதால் இவைகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகளின் விலையும் இதனால் உயரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

ஆம்னி பஸ்களின் கட்டணமும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரூ. 30 முதல் 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பஸ்காரர்களும் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். 

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் ஏற்கனவே பஸ் மற்றும் வேன் கட்டணம் தாறுமாறாக வாங்கப்படும் சூழலில் தற்போதைய டீசல் விலை உயர்வை காரணமாக வைத்து இந்த கட்டணங்களை மேலும் 15 சதவீதம் வரை உயர்த்த கல்வி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. எனவே பிள்ளைகளை பஸ் மற்றும்  வேன்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களின் பாடு திண்டாட்டம்தான். 

பள்ளி நிர்வாகத்தினர் தரப்பில் கூறிய ஒருவர், டீசல் விலை மிகவும் உயர்த்தப்பட்டு விட்டது. நாங்கள் இந்த விலை உயர்வு முழுவதையும் பெற்றோர் மீது சுமத்த விரும்பவில்லை. அதனால்தான் 15 சதவீதம் மட்டும் இந்த கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago