முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் முதல்வருக்கு பாராட்டு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - ஏழைகளின் மனம் குளிரும் வகையில் நலத்திட்டங்கள் அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக தென் சென்னை மாவட்ட செயல் வீரர் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் திண்டிவனம் இடிமுரசு இஸ்மாயில் தலைமைத் தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.சிராஜூதீன் அலி, எ.ரபீக், எஸ்.தனுஸ்கோடி, எம்.ஜெய்லானி, முகம்மது இப்ராகீம், ஆர்.காஜாமைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஏழை எளிய மக்கள் மனம் குளிரும் வகையில் மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு இக்கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய அரசு சமையல் கேஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி உள்ளதை இக்கூட்டம் வண்மையாக கண்டிக்கிறது. விலையேற்றத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

லோக்பால் மசோதாவில் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரணை வரம்பில் சேர்த்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்டு வீடில்லாத ஏழை முஸ்லிம்களுக்கு வீடுகளை கட்டி குறைந்த வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் ஜெயலலிதாவை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியதைப்போல பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், பிலால்கள் ஆகியோர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவோம் என அறிவித்து சைக்கிள் வழங்காமல் இஸ்லாமியர்களை கருணாநிதி ஏமாற்றி விட்டார். எனவே முதல்வர் ஜெயலலிதா இலவச சைக்கிள்களை வழங்க வேண்டுமென கூட்டம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago