முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவிலிருந்து 528 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். 28 - கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டிலிருந்து இரு விமானங்கள் மூலம் 528 இந்தியர்கள் தாயகம் வந்து சேர்ந்தனர்.இவர்கள் அனைவரும் இரு அணிகளாக இரு விமானங்களில் வந்திறங்கினர். லிபியா நாட்டில் அந்நாட்டு அதிபர் கடாபிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி எழுந்துள்ளது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவம் அடக்கு முறையை ஏவி விட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே பல இடங்களில் கடுமையான துப்பாக்கி சண்டைகள் நடந்து வருகின்றன. கலவரம், வன்முறை, துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களில் இது வரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சுமார் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நேற்று முன்தினம் இரவு 291 இந்தியர்களுடன் முதலாவது விமானம் திரிபோலி நகரில் இருந்து டெல்லி வந்து சேர்ந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இவர்கள் அனைவரும் வந்திறங்கினார்கள். அங்கு அவர்களை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆர்வத்தோடு வரவேற்றனர். 

இந்த ஏர் இந்தியா விமானத்தை அடுத்து இன்னொரு ஏர் இந்தியா விமானம் 237 இந்தியர்களுடன் நேற்று காலை டெஏல்லி விமான நிலையம் வந்திறங்கியது. இவர்களையும் சேர்த்து இதுவரை 528 இந்தியவ்கள் இரு கட்டங்களாக தாயகம் திரும்பியுள்ளனர். 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இ. அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் தாயகம் திரும்பிய இந்தியர்களை வரவேற்றனர்.

இந்தியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான  தமிழ்நாடு,கேரளா, உள்ளிட்ட 12 மாநிலங்களின் குடியிருப்பு கமிஷனர்கள் உதவி செய்தார்கள்.

லிபியாவில் உள்ள எஞ்சிய இந்தியர்களையும் மீட்க மேலும் சில ஏர் இந்தியா மானங்களும்  இந்திய போர்க்கப்பல்களும் லிபியா விரைந்துள்ளன.

லிபியாவில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அங்குள்ள இந்தியர்கள் 4 நாட்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் தாங்களும் அவ்வாறு கஷ்டப்பட்டதாகவும் தாயகம் திரும்பிய இந்தியர்கள் கூறினார்.

லிபியா மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. போலீசார் தெருக்களில் இல்லை. இதனால் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தாயகம் திரும்பிய மொகம்மது சாலி என்பவர் கூறினார். இவர் ஒரு என்ஜினீயர் . இவர் கடந்த 31 ஆண்டு காலமாக லிபியாவில் வசித்து வருகிறார்.

உள்ளுர் மக்கள் தீ வைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். 

உள்ளூர் மக்கள்தான் தங்களுக்கு தங்குவதற்கு இடம் தந்து பாதுகாப்பு கொடுத்தனர் என்றும் அவர் கூறினார். குறிப்பாக வங்காள தேசம் , இத்தாலி  போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் உதவி செய்தார்கள் என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago