முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் துணைத் தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.27 - மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்றும் நாளையும் தேர்வுகூட அனுமதி சீட்டு வழங்கப்படும். இது குறித்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஏப்ரல் 2011 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் 10 ம் வகுப்பு தேர்வெழுதி ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற தேர்வர்களுக்கான சிறப்பு துணை தேர்வு வரும் 29 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மார்ச் 2011 ம் ஆண்டில் பள்ளி மாணவர்கள் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு கூட அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம். 

மார்ச் 2010 ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தனித் தேர்வர்களாக தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வு கூட அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியன் தேர்வர்கள், கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அண்ணாசாலை, சென்னை - 2 ல் தேர்வு கூட அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவு வெளியானவுடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு சுய விலாசமிட்ட ரூ. 30 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையை தேர்வு எழுதும் முதல் நாளில் தேர்வு கூட தலைமை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்