முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் கோயில் யாத்திரை: ஹெல்ப்லைன் அறை திறப்பு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூன்.27 - அமர்நாத் பனி லிங்க கோயிலுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு 24 மணி நேரமும் உதவி செய்வதற்காக கட்டுப்பாடு (ஹெல்ப்லைன்) அறையை ஸ்ரீ அமர்நாத்ஜி கோயில் அறக்கட்டளை திறந்துள்ளது. இமயமலையில் அமர்நாத் பனி லிங்க கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருடந்தோறும் ஜம்மு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வழிபட்டு வருவார்கள். அமர்நாத் யாத்திரை வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டிருப்பதால் அவர்களுக்கு மூன்றடக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் அவசரகால உதவிக்கு நேற்றுமுன்தினம் முதல் கட்டுப்பாடு (ஹெல்ப்லைன்) அறை திறக்கப்பட்டுள்ளது என்று அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கட்டுப்பாடு அறையை ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னரும் அமர்நாத்ஜி அறக்கட்டளையின் தலைவருமான என்.என்.வோரா திறந்துவைத்தார் என்று வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.கே. கோயல் தெரிவித்தார். யாத்திரை தொடர்பாக யாரும் எந்த விளக்கமும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் கோயல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்