முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க தேவையில்லை முதல்வர் ஜெயலலிதா பேட்டி

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 28 - லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு தேசிய அரசியலில் தற்போது நுழையும் எண்ணம் இல்லை. இந்திய அரசியலில் மூன்றாவது அணி அமையுமா? என்பதை எல்லாம் என்னால் இப்போது சொல்லமுடியாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொருந்திருந்து பார்க்கவேண்டும். கடந்த ஆண்டு (2010) மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறினேன். ஆனால் சூழ்நிலைகள் மாறி விட்டன. தி.மு.க.வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியில் தான் உள்ளது. நான் காங்கிரசுக்கு ஆதரவு தருவேன் என்று கூறியதை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்கவேண்டும். 

மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று அப்போது எடுக்கப்பட்ட முடிவு. தற்போது இதுபோன்ற சூழ்நிலை எதுவும் நிலவவில்லை. ஊழல் மந்திரிகளுக்கு எதிராக பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊழல் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கை தேவை. மத்திய மந்திரி தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்று நான் கூறினேன். தயாநிதி மாறன் பதவி நீக்கப்படுவாரா? என்பதை பிரதமர் தான் விளக்கமளிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றார். அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததான் உண்மை. அடுத்த தேர்தலுக்குள் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம். இதுகுறித்து தற்போது நான் எதுவும் கூறமுடியாது. அரசியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். மாற்றம் என்பதே அரசியலில் சூத்திரமாக உள்ளது. 

அரசியிலில் ஒருவர் நெகிழ்ந்து கொடுக்கவேண்டும். தற்போது அரசியிலில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது அதனை சமாளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். 3-வது அணி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். லேக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க தேவையில்லை. அவரை சேர்த்தால் வெளிநாடு சக்திகளுக்கு சாதகமாகும். மேலும் மத்திய அரசுக்கு இணையான ஒரு அரசு செயல்பட வாய்ப்பு ஏற்படும். மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்பது முடிந்துவிட்டது. கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் எந்தொரு கட்சியும் நீண்ட நாட்கள் ஆட்சி நடத்தமுடியாது. தேசிய அரசியல் குறித்த குறிக்கோள் எதுவும் எண்ணிடமில்லை. எதிர்கால இந்தியா குறித்த எண்ணம் எனக்கு உண்டு. என்னைப் பற்றி இல்லை. 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்