முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் முதல்வர் எடியூரப்பா வழிபாடு சத்தியம் எதுவும் செய்யவில்லை

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

தர்மசாலா,ஜூன்.- 28 - கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் வழிபாடு செய்தார். ஆனால் அவர் சத்தியம் எதுவும் செய்யவில்லை. முதல்வர் எடியூரப்பா மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர பெங்களூர் வழக்கறிஞர் ஒருவருக்கு அந்த மாநில கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். இதனால் பரத்வாஜூக்கும் எடியூரப்பாவுக்கும் மோதல்போக்கு முற்றிய நிலையில் உள்ளது. மேலும் எடியூரப்பா மீது நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி சுமத்தினார். பெங்களூரில் பல இடங்களில் எடியூரப்பாவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குமாரசாமி கூறினார். இதற்கு எடியூரப்பா மறுத்ததோடு என் மீது ஊழல் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை நிரூபிக்க தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா என்று குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்தார். இந்த சவாலை குமாரசாமியும் ஏற்றுக்கொண்டார். அப்படியென்றால் சத்தியம் செய்ய தேதி குறியுங்கள் என்று இருவரும் கூறினர். இந்தநிலையில் கோயிலில் சத்தியம் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலில் மதத்தை கலக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சத்தியம் செய்யும் முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி மற்றும் மதத்தலைவர்கள் கேட்டுக்கொண்டதிணங்க சத்தியம் செய்வதை நிறுத்திக்கொண்டதாகவும் எடியூரப்பா கூறினார். 

அதேசமயத்தில் தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் சுவாமி கோயிலுக்கு சென்று முதல்வர் எடியூரப்பா நேற்று வழிபாடு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, நான், சுவாமி மஞ்சுநாதரை இன்று (நேற்று)வழிபட்டேன். அப்போது எனக்காக எதையும் நான் கேட்டுக்கொள்ளவில்லை. கர்நாடக மாநிலம் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று மாநிலத்தின் 6 கோடி மக்களின் சார்பாக கடவுள் மஞ்சுநாதரை கேட்டுக்கொண்டேன் என்றார். மாநிலத்தில் நல்ல முறையில் பருவமழை பெய்து மேலும் மேலும் செழிக்க வேண்டும். கடவுளின் அருளால் கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து செழித்துள்ளது. அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதேமாதிரி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் எடியூரப்பா கூறினார்.

கர்நாடகத்தை கடனுக்குள்ளாக்கிவிட்டேன் என்று காங்கிரசாரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் கூறுவை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னுடைய 3 ஆண்டு ஆட்சியில் மாநிலம் முன்னேறியுள்ளது. மாநிலத்தின் நிதிநிலைமையும் நன்றாக உள்ளது என்றும் எடியூரப்பா மேலும் கூறினார். 

முன்னதாக முதல்வர் எடியூரப்பாவுடன் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கோயிலுக்குச் சென்றனர். அமைச்சரவை விஸ்தரிக்கப்படுமை என்று நிருபர்கள் கேட்டதற்கு கோயில் ஸ்தலத்தில் அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை என்று எடியூரப்பா பதில் அளித்தார். பின்னர் ஒரு பஸ்சில் ஏறி, குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு எடியூரப்பா சென்றார். தர்மசாலாவில் எடியூரப்பாவுக்கும் குமாரசாமிக்கும் எதிராக விவசாய சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். கோயில் நகரான தர்மசாலாவை அரசியலாக்குவதற்கும் பக்தர்களுக்கு இடையூறு செய்வதற்கும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago