முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடமாடும் போக்குவரத்து சிக்னல் வாகனம் சென்னையில் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 28 - தமிழக போலீசாரை ஊக்கப்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக போலீசார் 6 பேர் பதக்கம் பெற்றுள்ளனர். இவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா, சென்னையில் இன்று நடக்கிறது. அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் எளிய விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு 6 போலீசாருக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறார்.  போக்குவரத்து விதிகளை மீறுகிறவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கும் முறை இதுவரை இருந்து வந்தது. இதில் தவறு நடைபெறாமல் தடுக்க இ​செலான் வழங்குவது சமீபத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

எனவே இ​செலான் முறைப்படித்தான் இனி போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையும் முதல்வர் ஜெயலலிதா இன்று நடைபெறும் விழாவில் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.  அவசர நேரத்திலும், போக்குவரத்து நெருக்கடியான இடங்களிலும் பயன்படுத்துவதற்காக போக்குவரத்து சிக்னல் வாகனங்களை தமிழக அரசு வாங்கி உள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இவை செயல்படும். விழாவில் முதல்வர் ஜெயலலிதா, 20 போக்குவரத்து சிக்னல் வாகனங்களை போலீசாரிடம் ஒப்படைத்து இயக்கி வைக்கிறார்.

அண்ணா சாலை போலீஸ் நிலைய பதிவேட்டிலும் கையெழுத்திடுகிறார். நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ், மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்