முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி பூங்காவை மேம்படுத்த ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 28 - வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி பூங்காவை மேம்படுத்த வேண்டுமென நடையாளர் கழகம் சார்பில் ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனுக்கொடுக்கப்பட்டது.  மதுரை கே.கே. நகர் வண்டியூர் பூங்கா நடையாளர் கழகத்தின் மாதாந்திர கூட்டம் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் நடையாளர் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 30 ஆண்டுகளாக எங்களது நடையாளர் கழகம் வண்டியூர் பூங்காவில் நடைபாதை அமைத்து நாலாபுரமும் வேலி அமைத்து மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். இந்த பூங்காவை மேலும் அழகுபடுத்தி நீரூற்றுகள், மேல்நிலைத்தொட்டி, ஆழ்கிணறு, கழிப்பறைகள் அரசு சார்பில் உருவாக்கி தர வேண்டும். மதுரை நகரில் வடபகுதியில் நீர் ஆதாரம் வண்டியூர் கண்மாய்தான். எனவே இந்த கண்மாயை தூர்வாறி ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 15 அடி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கினால் பயணிகள் படகு சவாரி செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசின் அவரசக் கவனத்திற்கு எடுத்துச்சென்று தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ஏற்பாடுகளை செய்வேன் என்று உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் நடையாளர் கழக தலைவர் பெரியணன், துணைத்தலைவர் கே.சி.குருசாமி, செயலாளர் வி.என்.எஸ்.எஸ்.சுப்புராம், இணைச்செயலாளர்கள் வி.சொக்கலிங்கம், எஸ்.முகமத், பொருளாளர் எம்.ரவிக்குமார் மற்றும் வழக்கறிஞர் வீரணசாமி, கே.கே. நகர் எம்.பிச்சை, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்  ஜெயராமன், இளைஞரணி பகுதி கழக செயலாளர் பரமேஸ்வரன், அ.தி.மு.க. வட்டச்செயலாளர் எஸ்.போஸ், முத்துசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை முன்னாள் இணைச்செயலாளர் எம்.என். கோவிந்தராஜன் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago