முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - மே.இ.தீவு அணிகள் மோதும் 2 -வது டெஸ்ட் இன்று துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், ஜூன். - 28 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுன் நகரில் இன்று துவங்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஆயத்த நிலையி ல் உள்ளனர். முன்னதாக நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்த டெஸ்டையும் வென்று தொடரைக் கைப்பற்றுமா என்ற ஆர்வத் தில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். அவர்களது விருப்பத்தை தீர்க்கும் வகையில் இந்திய வீரர்கள் களம் இறங்குகின்றனர். கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கும், கேப்டன் டேர ன் சம்மி தலைமையிலான மே.இ.தீவு அணிக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் கடந்த வாரம் துவ ங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

ஜமைக்காவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார் பில், முதல் இன்னிங்சில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் 

டிராவிட் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்தனர். பின்பு 2 -வது இன்னி ங்சில் டிராவிட் மற்றும் ரெய்னா இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 

இந்திய அணியின் முதல் இன்னிங்சில் பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். அதே போல 2 -வது இன் னிங்சிலும் அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். அமித் மிஸ்ரா  ஹர்பஜ ன் சிங் மற்றும் ரெய்னா ஆகியோர் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசி நர். 

ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி மே.இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதன் மூலம் தனது திறனை நிரூபித்து விட்டது. 

இந்த நிலையில் இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே யான 2 -வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங் டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு துவங்க இருக்கிறது. இந்த ஆடு களத்தில் பந்துகள் சற்று கூடுதலாக பவுன்ஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. 

50 ஓவர் ஒரு நாள் போட்டியில் சாம்பியனான இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. டிராவிட், கோக்லி,தோனி, விஜய், லக்ஷ்மண், ரெய்னா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே இந்த டெஸ்டிலும் அவர்களது வேட்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. 

மேலும், முதல் டெஸ்டில் அறிமுகமான பிரவீன் குமார் அபாரமாக பந்து வீசி மொத்தம் 6 விக்கெட்டைக் கைப்பற்றி கேப்டனின் பாராட்டையும் பெற்றார். அவருடன் இணைந்து பந்து வீசிய இஷாந்த் சர்மா வும், 6 விக்கெட் கைப்பற்றினார். 

தவிர, முதல் இன்னிங்சில் முன்னணி சுழற் பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங் மற்றும் அமித் மிஸ்ரா இருவரும் வெகு நேர்த்தியாக பந்து வீசினர். 2 -வது இன்னிங்சிலும் அவர்களது ஆதரவு தொடர்ந்தது. 

ஒட்டு மொத்தத்தில் இந்திய பெளலர்கள் முதல் டெஸ்டில் கச்சிதமாக பந்து வீசி விக்கெட்டுகளைக் குவித்து அணியை வெற்றி பெற வைத்தநர். எனவே அவர்களது பந்து வீச்சு இதிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago