முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்வ வரி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிப்பு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.29 - மத்திய அரசின் சொத்துவரித்துறை தொடர்ந்த செல்வ வரி வழக்கில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதா 1993-94ம் ஆண்டில் செல்வவரி கணக்கை காட்டவில்லை என்று குற்றம் சாட்டி 1996ம் ஆண்டு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டில் ஜெயலலிதா மனுத்தாக்கல்  செய்திருந்தார். அந்த மனுவை எழும்பூர் கோர்ட் நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 1993-94ம் ஆண்டு செல்வவரி கணக்கை செலுத்தத்தேவையில்லை என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடிட்டர் மற்றும் சில சட்ட நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனையை ஏற்று செயல்பட்டேன். எனவே நான் வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என்று குற்றம் சாட்டமுடியாது. என்மீது வழக்கு தொடருவதற்கு அனுமதி வழங்கியதில் உள்நோக்கம் உள்ளது. எனவே என்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். எனது மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா தரப்பில் வக்கீல்கள் நவநீத கிருஷ்ணன், இன்பதுரை ஆகியோர் ஆஜரானார்கள். முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவிப்பதாக நீதிபதி ஆணை பிறப்பித்தார்.அவரை விடுவிக்க மறுத்து எழும்பூர் கோர்ட் பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago