முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி குறித்து ஆய்வு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.29 - சென்னையில் குடிநீnullர் மற்றும் கழிவுநீnullர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள்  குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் கே.பி.முனுசாமி, செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கீழ்ப்பாக்கம் nullநீர் சுத்திகரிப்பு நிலையம் 1914ஆம் ஆண்டு சென்னை மாநகரின் குடிநீnullர் தேவைக்காக நிறுவப்பட்டது. பின்னர் விரைவு மணல் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 270 மில்லியன் லிட்டர் கொள்ளளவிற்கு சுத்திகரிப்புத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

nullண்டி, சோழவரம் மற்றும் செங்குன்றம் ஆகிய மூன்று முதன்மை ஏரிகளிலிருந்து குடிnullநீர் தேவைக்காக சுத்திகரிக்கப்படாத nullநீர் கீழ்ப்பாக்கம் nullநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மூன்று ஏரிகளின் மொத்த கொள்ளளவு 7412 மில்லியன் கன அடி ஆகும்.

செங்குன்றம் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்படாத nullநீர் மூடிய செங்கல் கட்டிட கால்வாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் nullநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு நாளொன்றுக்கு 240 மில்லியன் லிட்டர் nullநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

தண்ணீரிலுள்ள கிருமிகளை அழிப்பதற்காக ஏரியிலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்படாத nullநீரில் தேவையான அளவு முதல் நிலையில் குளோரின் செலுத்தப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்ட நீnullரில் எஞ்சியுள்ள நோய் கிருமிகளை அழிப்பதற்காக குளோரின் மீண்டும் செலுத்தப்படுகிறது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட nullநீர்  மூன்று முதன்மை குழாய்கள் வழியாக சென்னை மாநகரின் பகுதிகளுக்கு குடிநீnullர் தேவைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் குடிநீnullர்  சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரடியாகச் சென்று அதன் செயல்பாட்டினை  ஆய்வு செய்தார்கள். சென்னை நகரில் தற்போது, மொத்தம் நாளொன்றுக்கு 486 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீnullர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

சென்னை மாநகரின் தென் பகுதிகளான தியாகராய நகர், கோடம்பாக்கம், அண்ணாநகர், அரும்பாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், கோயம்பேடு மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளிலிருந்து பெறப்படும் கழிவுnullநீர் (34 ஞ் 60 ஙகஈ) திறன் கொண்ட கழிவுநீnullர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட கழிவுநீnullர் சுத்திகரிப்பு நிலையம் கோயம்பேட்டில் கட்டப்பட்டு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையத்திலிருந்து கழிவுநீnullர்க் கசடுகளிலிருந்து வெளியேறும் மீதேன் வாயு  மூலமாக தயாரிக்கப்படும் மின்சாரத்தின் மூலம் இந்த சுத்திகரிப்பு நிலையம் இயக்கப்படுகிறது. இந்த கழிவுநீnullர் நிலையத்திற்குத் தேவையான மின்சாரத்தின் 80 விழுக்காடுகள் இங்கிருந்து வெளியேறும் மீதேன் வாயு மூலமாக தயாரிக்கப்படுகிறது. இதனால், வருடத்திற்கு ரூபாய் 86.40 லட்சம் சேமிக்கப்படுகிறது. இதுவரை, இந்த கழிவுnullநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுமார் ரூபாய் 380 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நான்கு கழிவுnullநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள  மூலம் ஆகஸ்ட் 2005 முதல் இது வரை சுமார் ரூபாய் 23 கோடி மின் கட்டணமாக சேமிக்கப்பட்டுள்ளது. மீதேன் வாயுவை உபயோகிப்பதன் மூலம், வாயு மண்டலம் வெப்பமாவதைத் தடுக்க இயலும். இதன் மூலம் கார்பன் முதலீடுயிடமிருந்து பெற இயலும்.

கோயம்பேடு கழிவுநீnullர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுnullநீர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வரைமுறையின்படி கூவம் நதியில் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையத்தின் சுத்திகரிப்பு பணிகளை  நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, செய்தித்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் நேற்று நேரில் பார்வையிட்டு கழிவுnullநீரிலிருந்து nullநீக்கப்பட்ட பல்வேறு பிளாஸ்டிக்  திடப்பொருட்களைக் கண்டு அத்தகு பொருட்கள் பொது மக்களால்  கழிவுநீnullர் அமைப்புகளில் இட்டு கழிவுநீnullர் செல்லும் பாதையில் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்கள்.  அப்போது சென்னைக் குடிnullநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால், நாடாளுமன்ற உறுப்பினர்  நா.பாலகங்கா மற்றும் வாரிய உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்