முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் கருணாநிதி பதவி விலக விஜயகாந்த் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையில் ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்த பணத்தை கடனாக கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை வெளிவந்துள்ளதால் முறையாக விசாரணை நடைபெற முதலமைச்சர் பதவியிலிருந்து கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

காவல்துறையினரால் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு புலனாய்வு மேற்கொள்ளப்படும்போது அதில் யாரும் தலையிட முடியாது. உச்சநீnullதிமன்றம் கூட குற்றப் புலனாய்வில் தலையிட முடியாது. குற்றங்கள் குறித்த புலன் விசாரணை நேர்மையாக நடைபெற்று உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்பதாலேயே இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது. பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்து குற்றப் புலனாய்வு மேற்கொள்கிறபோது, அவர் மந்திரி என்ற அதிகாரத்தில் இருப்பதால் சாட்சிகள் உண்மைகளை சொல்ல பயப்படுவார்கள் என்பதாலேயே அத்தகையோர் பதவி விலகுவது முக்கியமாகும். அதன்படியே 2ஜி அலைக்கற்றை வழங்கியதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ராஜா பதவி விலக வற்புறுத்தப்பட்டது.

2ஜி அலைக்கற்றை குற்றப் புலனாய்வினை உச்சநீnullதிமன்றம் சி.பி.ஐ. மூலம் நேரடியாகக் கண்காணிக்கிறது. சி.பி.ஐ. அதன்படியே அவ்வப்பொழுது புலனாய்வின் நிலவரம் குறித்த அறிக்கைகளை உச்சநீnullதிமன்றத்திற்கு சமர்ப்பித்து வருகிறது. அதன்படி 10.2.2011-ம் தேதி அன்று உச்சநீnullதிமன்றத்திற்கு சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தபோது உச்சநீnullதிமன்றம், nullர்வாங்க ஆதாரம் இருந்தால் சி.பி.ஐ. இந்த ஊழல் பணத்தில் பலன் அடைந்தவர்களை தேடிப் பிடிக்க வேண்டும் என்றும், எவ்வளவு பெரிய முக்கியஸ்தர்களாக இருந்தாலும் அவர்களை விட்டுவிடக் கூடாது என்றும் கூறியுள்ளது.

2ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை விவரங்களாக வெளி வந்துள்ளன. மேலும் சிங்கப்nullரைச் சேர்ந்த எஸ்டெல் கம்பெனி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது என்று தெரிகிறது.

கலைஞர் டி.வியின் உரிமையாளராக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாருக்கு 60 சதவிகித பங்குகளும், அவரது மகள் கனிமொழிக்கு 20 சதவிகித பங்குகளும், சரத்குமார் என்பவருக்கு 20 சதவிகித பங்குகளும் உள்ளன என்ற விவரம் வெளி வந்துள்ளன. சரத்குமார் என்பவர் மேற்கூறிய எஸ்டெல் நிறுவனத்திலும் ஒரு குறிப்பிட்ட காலம் இயக்குநராகவும் இருந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஊழல் பணத்தின் மூலம் பலன் அடைந்துள்ளனர் என்று தெரிகிறது. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு இந்த அளவுக்கு வருமானம் தரத்தக்க எந்த தொழில்களும் இல்லை. முதலமைச்சர் கருணாநிதியின் நேரடி உறவினர்கள் என்பதாலேயே இந்தப் பணம் தரப்பட்டுள்ளது என்பதும், கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் காரணத்தால் நேரடியாக இந்தப் பணத்தை பெற முடியாமல் தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் பெற்றிருக்கிறார் என்பதும் யூகித்து உணரலாம். ஊழல் தடுப்புச் சட்டம் முதலமைச்சர் கருணாநிதிக்கும் பொருந்தும்.

கருணாநிதி தமிழக அரசின் முதலமைச்சராக இருப்பதாலும், மத்திய அரசில் கூட்டணி கட்சி என்ற முறையில் அங்கம் வகிப்பதாலும் சி.பி.ஐ. மேற்கொள்ளும் இந்த விசாரணை முறையாக நடைபெறாமல் தடங்கல்கள் ஏற்பட பெருமளவில் வாய்ப்புகள் உள்ளன. அதிகாரத்தில் இருப்பதனால் அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இதில் சம்பந்தப்பட்டவர்களை முறையாக விசாரிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் வாய்ப்பும் உள்ளது. எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ, அதே போல கருணாநிதி மாநில அரசின் முதலமைச்சராக இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும் என்பதால், தமிழ்நாடு அரசில் அங்கம் வகிக்கும் முதலமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும். சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும்.கருணாநிதி பதவி விலக மறுத்தால் நீnullதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.

உச்சநீnullதிமன்றம் முறையாக இந்தப் புலனாய்வு நடைபெற கண்காணித்து வருகிறது. கருணாநிதியின் அரசு தொடர்ந்து இருப்பதால் இந்தப் புலனாய்வு முறையாக நடைபெற வாய்ப்பு இல்லை. உச்சnullநீதிமன்றம் அரசியல் சட்டத்தின்படி இயங்குகிற அமைப்பாகும். அதன் கடமையை நிறைவேற்ற முடியாதபடி கருணாநிதி அரசு நீnullடிப்பது, நெருக்கடியை ஏற்படுத்துவதால், மத்திய அரசு உடனடியாக கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வந்து சட்டம் தன் கடமையைச் செய்ய வழி வகுக்க வேண்டும்.

தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

மேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும். தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் என்றே கருதுகிறேன். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் கடைப்பிடித்த அராஜகங்களையும், பின்னர் இடைத் தேர்தல்களில் கையாண்ட ஊழல் போக்குகளையும் அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள். ஆகவே, உடனடியாக தி.மு.க. அரசை பதவி நீnullக்கம் செய்து நேர்மையான தேர்தல்கள் நடைபெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago